Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது தெற்காசிய பொதுக்கொள்முதல் மாநாடு

In இலங்கை
Published: 10:54 GMT, Feb 20, 2017 |
0 Comments
1125
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

தெற்காசிய வலயத்தின் நான்காவது பொதுக்கொள்முதல் மாநாடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.

தலைநகர் கொழும்பு மற்றும் கண்டியில் எதிர்வரும் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி நிதியம் மற்றும் இஸ்லாமிய வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

இலத்திரனியல் கொள்முதல் முறைமைக்கு எமது நாடு மாறவேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்துள்ள அரசாங்கம் நான்காவது மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்குத் தீர்மானித்தமை சிறப்பம்சமாகும்.

நாட்டின் நலனுக்காக புதிய பொருளாதார மற்றும் சமூக சூழலை ஏற்படுத்துவதற்காக மட்டுமன்றி, சிறந்த அபிவிருத்தியை நோக்கி ஒரு தெளிவான பிரவேசத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்புகளுக்கு இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகின்றதென ஜனாதிபதி ஊடகப் பிரிவிவு குறிப்பிட்டுள்ளது.

இலத்திரனியல் கொள்முதல் முறைமைக்கு நாட்டை மாற்றுவதன் மூலம் அரச நிதி முகாமைத்துவத்தைத் துரிதமாகவும் வினைத்திறன்மிக்கதாகவும் மேற்கொள்வதுடன் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து ஊழல் மோசடிகளுக்கான வாய்ப்புகளை குறைக்க முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

இம்மாநாட்டின் மூலம் பூகோள ரீதியான கொள்வனவின்போது எமது நாடு உயர்ந்த இடத்தை பெறுவதற்கும், பிராந்திய நாடுகளின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg