Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென். ஆபிரிக்க அணி வெற்றி

In கிாிக்கட்
Updated: 14:38 GMT, Feb 20, 2017 | Published: 11:35 GMT, Feb 20, 2017 |
0 Comments
1235
icon_com
This post was written by : Shailu
nz-cricket-feb-19

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென். ஆபிரிக்க அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து – தென். ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹெமில்டனில் இடம்பெற்றது.

இந்நிலையில், மழை காரணமாக போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் ஆடிய நியூசிலாந்து 34 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்சமாக அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 53 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பின்னர் 208 ஓட்டங்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய தென். ஆபிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தென். ஆபிரிக்க அணி 33.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலைப் பெற்றுள்ளது.

இதற்குமுன் தென். ஆபிரிக்க தொடர்ந்து 12 வெற்றிகளை பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த வெற்றியின் மூலம் 2-வது முறையாக தொடர்ந்து 12 முறை வெற்றியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg