Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாவனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த மூவர் கைது

In சினிமா
Updated: 11:41 GMT, Feb 20, 2017 | Published: 11:41 GMT, Feb 20, 2017 |
0 Comments
1604
This post was written by : Surenth

நடிகை பாவனாவை பாலியல் தொல்லை கொடுத்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாவனா சமூகத்தில் பிரபலமாக உள்ளதால் தனது பெயர் கெட்டுவிடும் என பயந்து தனக்கு நேர்ந்ததை வெளியே சொல்ல மாட்டார் என்று நினைத்து மூவரும் இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாவனா துணிந்து பொலிஸில் முறைப்பாடு அளித்து அந்த 3 பேரையும் அடையாளம் காட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் பாவனாவின் முன்னாள் கார் சாரதி உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg