Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்தில் சமூக கொடுப்பனவுகளில் குறைப்பு நடவடிக்கை

In
Updated: 17:57 GMT, Feb 20, 2017 | Published: 13:07 GMT, Feb 20, 2017 |
0 Comments
1457
icon_com
This post was written by : S.K.Guna
Council tax

இங்கிலாந்து உள்ளூராட்சி சபைகள் சமூக நலன் சார்ந்த விடயங்களில் குறைப்புகளை மேற்கொள்ளவுள்ள அதேவேளை வரிவிதிப்பினை உயர்த்தவுள்ளன.

வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து வாக்கெடுப்பின்றி அனைத்து நகர சபைகளும் 1.99% வரி அதிகரிப்பினை நடைமுறைப்படுத்தவுள்ளன.

மேலும் சமூக நலன்கள், வீதிகள் , நெடுஞ்சாலைகள், பஸ் சேவைகள், நூலகங்கள், ஓய்வு மையங்கள், சிறுவர் சேவைகள் முதலான கொடுப்பனவுகளில் வெட்டுக்களை மேற்கொள்ள உள்ளூராட்சி சபைகள் உத்தேசித்துள்ளன.

நூலகங்களின் பராமரிப்பு, வயோதிபர் பராமரிப்பு, கழிவு சேகரிப்பு, மற்றும் ஏனைய சேவைகளில் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணத்தாலேயே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை உள்ளூராட்சி சபைகளின் ஒன்றியத்தின் தகவலின்படி வயோதிபர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையினால் அவர்களுக்கான பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் வயோதிபர்களை வைத்துப் பராமரிக்கின்ற இல்லங்கள் பராமரிப்புக்கட்டணங்களை உயர்த்தியுள்ளதாகவும் அவற்றில் 151 நிர்வாகங்கள் கட்டண உயர்வை 3% ஆல் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg