Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர் பிரித்தானிய மக்கள்

In
Published: 12:21 GMT, Feb 20, 2017 |
0 Comments
1157
icon_com
This post was written by : Sylviya
15 - 2

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று (திங்கட்கிழமை) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஆர்வலர்கள் கலந்துகொள்வர் எனவும் அவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை The Stop Trump coalition எனும் அமைப்பு ஒழுங்கமைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பேச்சாளர் இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, “இது போன்ற மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதன் மூலம் சில சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள எண்ணங்களை உலகிற்கு எடுத்துக் காட்ட முடிவதோடு சில தீர்மானங்களை மாற்றியமைக்கவும் முடியும்” என தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மாணவர் சங்கம் மற்றும் ஜி.எம்.பி சங்கம் ஆகியனவும் கலந்துகொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

15
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg