Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் – அமலாபால் விவாகரத்தின் தீர்ப்பு நாளை

In சினிமா
Published: 12:40 GMT, Feb 20, 2017 |
0 Comments
1455
icon_com
This post was written by : Surenth
Amala Pual With Husband

விஜய் – அமலாபால் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கூடுதல் குடும்பநல நீதிமன்ற நீதிபதி பூங்குழலி முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது விஜய் – அமலாபால் இருவரும் நேரில் ஆஜராகி, ஒருமனதாக பிரிவதாக கூறி பிரமாண பத்திரங்களை தனித்தனியாக தாக்கல் செய்தனர். இதனை அடுத்து வழக்கின் தீர்ப்பை நாளை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இவர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
திருமணத்துக்குப் பின்னரும் அமலாபால் தொடர்ந்து நடித்ததால், அதற்கு விஜயின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து விஜயும், அமலாபாலும் சுமுகமாக பிரிவது என்று முடிவு செய்தனர். அதன்படி, இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg