Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோபோக்களுக்கும் வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் என்கிறார் பில்கேட்ஸ்

In அறிவியல்
Updated: 13:07 GMT, Feb 20, 2017 | Published: 12:58 GMT, Feb 20, 2017 |
0 Comments
1311
This post was written by : Vithushagan

ரோபோ’ எனப்படும் எந்திர மனிதன் தற்போது அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது இதனால் மனிதர்கள் செய்யும் வேலைகள் ‘ரோபோ’க்களால் செய்யப்படுகின்றன.

மனிதர்களை வைத்து வேலை வாங்கும் போது அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதை தவிர்க்கவே நிறுவன உரிமையாளர்கள் ‘ரோபோ’க்களை பயன்படுத்துகின்றன. இதனால் மனிதர்களின் பணிகள் பறிக்கப்படுகின்றன.

எனவே, பணியில் அமர்த்தப்படும் ‘ரோபோ’க்களுக்கு வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் என மைக்ரோசாப்ட் க நிறுவன அதிபரும், உலகிலேயே முதலாவது பணக்காரருமான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

“தொழிற்சாலைகளில் ஒரு மனிதன் 50 ஆயிரம் டொலருக்கு பணிபுரியும் போது வருமான வரி, சமூக பாதுகாப்பு வரி உள்ளிட்ட பலவகையான வரிகள் விதிக்கப்படுகின்றன. அதே போன்று தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தப்படும் ‘ரோபோ’க்களுக்கும் வரிகள் விதிக்கப்பட்டு அவை வசூலிக்கப்பட வேண்டும்.

‘ரோபோ’க்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்தை முதியோர் நலன் பாதுகாப்பு அல்லது பள்ளிகளில் குழந்தைகளுடன் பணிபுரியும் மகளிர் நலன் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg