Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரேபார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 17:56 GMT, Feb 20, 2017 | Published: 17:33 GMT, Feb 20, 2017 |
0 Comments
1238
icon_com
This post was written by : S.K.Guna
Brexit decision

பிரெக்ஸிற் நடைமுறை தொடர்பான விவாதம் பிரித்தானிய பிரபுகள் சபையில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

பிரபுகள் சபையில் பிரதமர் திரேசாமேயின் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் பிரெக்ஸிற் தொடர்பாக பிரித்தானிய மக்களின் முடிவை பிரபுக்கள் மதிக்கவேண்டுமென அரசாங்கம் கோரியுள்ளது.

பிரபுகள் சபையின் விவாதத்துக்குப்பின்னர் பிரெக்ஸிற் சட்டமூலம் அங்கீகரிக்கப்படுமென எதிர்பார்கப்படுகிறது.

marine le pen

பிரான்சில் எதிர்வரும் ஏப்ரல்மாதம் ஜனாதிபதி தேர்தல் முதற்சுற்று வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் தற்போதைய கருத்துக்கணிப்புகளில் அதிதீவிர வலதுசாரி வேட்பாளர் மரின் லெபன் முதற்சுற்று வாக்களிப்பில் முன்னிலைபெறுவார் என தெரியவந்துள்ளது.

எனினும் இரண்டாம்சுற்றில் முன்னாள் பிரதமர் பிரான்சுவா பிலியோங்கிடம் மரின் லெபன் தோல்வியடையலாமென எதிர்பார்கப்படுகிறது.

LIFE RALLY PENCE

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பங்காளராக இருந்து ஒத்துழைக்க அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

பிரெசெல்சில் ஐரோப்பிய ஒன்றிய பணியகத்தில் உரையாற்றியபோதே மைக் பென்ஸ் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பாக ஏற்கனவே வெளிப்படுத்திய கருத்துகள் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை சீற்றத்துக்கு உள்ளாக்கியமை குறி;ப்பிடத்தக்கது.

kim jong nam

வடகொரியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே புதிய ராஜதந்திர முறுகல் நிலை உருவாகியுள்ளது.

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதர் கிம் ஜொங் நாம் மலேசிய விமானநிலையத்தில் வைத்து கடந்தவாரம் மர்மநச்சுதாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர் இந்த முரண்பாடு எழுந்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக வட கொரியாவில் உள்ள தனது தூதரை மலேசியா திரும்ப அழைத்துள்ளது.

கிம் ஜொங் நாம் இன படுகொலைக்கு வடகொரிய புலனாய்வுத்துறையே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தபடுகொலை தொடர்பாக இதுவரை சிலர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 வட கொரியர்கள் தேடப்பட்டுவருகின்றனர்.

German Chancellor Merkel delivers her speech during the 53rd Munich Security Conference in Munich

ஜேர்மன் அதிபர் அஞ்கலா மேர்கலின் இன்றைய அல்ஜீரியப்பயணம் இறுதிநேரத்தில்  கைவிடப்பட்டது.

அல்ஜீரிய அதிபருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்தியதரைக் கடலைகடந்து ஐரோப்பாவுக்கு பெருமளவு குடியேறிகள் வரும் நிலையில் அதனைத்தடுப்பதற்கு அல்ஜீரியாவின் உதவியை மேற்கு ஐரோப்பிய நாடுகள் நாடுவது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg