Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதி இன்று வெளியாக வாய்ப்பு

In இந்தியா
Published: 04:12 GMT, Feb 21, 2017 |
0 Comments
1105
icon_com
This post was written by : Shailu
high court

தமிழக உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதி இன்று (செவ்வாய்கிழமை) அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நூட் ராமமோகன் ராவ் மற்றும் எஸ்.எம். சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குமார், உள்ளூராராட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலாக தாக்கல் செய்ய முயன்றார். மே 15 ஆம் திகதிக்கு பிறகே உள்ளூராராட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு 4 மாதங்கள் ஆகியும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர்.

அத்தோடு, உள்ளூராட்சித் தேர்தலுக்கு உத்தேச திகதி தேவையில்லை, நிர்ணயிக்கப்பட்ட தெளிவான திகதி தேவை எனவும் உத்தரவிட்டதோடு, இதற்கான இறுதி தீர்ப்பை நீதிபதிகள் இன்று (செவ்வாய்கிழமை) அறிவிப்பதாக கூறி வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

இதனால், உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி திகதியை மாநில தேர்தல் ஆணையம் இன்று உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவறினால், இடைக்கால உத்தரவாக தேர்தல் திகதியை நீதிமன்றமே வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg