Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான தி.மு.கவின் மனு விசாரணை நாளை (2ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 09:26 GMT, Feb 21, 2017 | Published: 04:25 GMT, Feb 21, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Shailu
High Court

நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் தாக்கல் செய்த மனு நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்கிழமை) நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று உயர்நீதிமன்ற தலைமைப் பொறுப்பு நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் தி.மு.க மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி மனு செய்தார்.

எதிர்கட்சியினர் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பினை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் முறையிட்டார்.

அத்தோடு, சட்டப்பேரவையில் அன்றைய தினம் எடுக்கப்பட்ட காணொளி பதிவில் சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் ஆகியோர் திருத்தம் மேற்கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டதையடுத்து, மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பை நிராகரிக்க கோரிய வழக்கு இன்று விசாரணை!

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி தி.மு.க சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று (செவ்வாய்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அத்தோடு இந்த மனுவை நீதிபதிகள் முதல் வழக்காக எடுத்து விசாரணை நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்ற தலைமைப் பொறுப்பு வகிக்கும் நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் மற்றும் ஆர்.மகாதேவன் முன்னிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் தி.மு.க மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி மனு செய்தார்.

கடந்த சனிக்கிழமை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக நீதிபதிகளிடம் முறைப்பாடும் முன்வைக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் அன்றைய தினம் காலை முதல் மாலை வரை நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தாக்கல் செய்துள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று சண்முகசுந்தரம் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்ற நீதிபதிகள், இதுதொடர்பான மனுவை முதல் வழக்காக இன்று எடுத்து விசாரிப்பதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg