Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூலித் தொழிலுக்கு போக இருந்த நடராஜனை மூன்று கோடிக்கு வாங்கியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

In கிாிக்கட்
Updated: 06:02 GMT, Feb 21, 2017 | Published: 05:30 GMT, Feb 21, 2017 |
0 Comments
3918
icon_com
This post was written by : Elakkiya
201702210934138453_not-being-cricketers-gone-to-work-for-wages-TN-player_SECVPF

கிரிக்கட் வீரராக இல்லையெனில் தினக்கூலி வேலைக்கு சென்றிருப்பேன் என ஐ.பி.எல் ஏலத்தில் 3 கோடி ரூபா ஏலத்தில் பெறப்பட்ட தமிழக வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள பத்தாவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று (திங்கட்கிழமை) பெங்களூரில் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் பரப்பாக பேசப்பட்டவர்களில் ஒருவரான 25 வயதுடைய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், 3 கோடி ரூபா ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தெரிவாகியுள்ளார்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரே நடராஜனில் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அதுமட்டுமின்றி நடராஜனை வெகுவிரைவாக அடையாளம் காட்டியது.

இந்நிலையில், நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த நடராஜன், ‘நான் கிரிக்கட் வீரராக உருவாகியிருக்கவில்லை எனில் தினக்கூலி வேலைக்கு சென்று கொண்டு இருந்திருப்பேன். சொந்த ஊரில் டென்னிஸ் பந்தில் விளையாடி நிறைய கிண்ணங்களை வென்றுள்ளேன். எனது பயிற்சியாளர் ஜெயபிரகாஷ். அவர் தான் எனது பெற்றோரிடம் பேசி என்னை சென்னையில் தங்கியிருந்து விளையாட வைத்தார். நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் எல்லா பெருமையும் அவரைத் தான் சாரும். ஏலத்தில் எடுக்கப்பட்ட தகவலை முதலில் அவரிடம் தான் பகிர்ந்து கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்றார்.

மேலும் அவர், தனது முன்மாதிரி அவுஸ்ரேலியாவின் மிட்செல் ஜோன்சன் என்றும் ஐ.பி.எல். தொடரின் போது அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg