Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக சிறைக்கு மாற்றக் கோரி சசிகலா சார்பில் மனு: கர்நாடக சிறைத்துறை மறுப்பு

In இந்தியா
Updated: 05:32 GMT, Feb 21, 2017 | Published: 05:13 GMT, Feb 21, 2017 |
0 Comments
1145
icon_com
This post was written by : Shailu
Sasikala

பெங்களூரில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றக் கோரி சசிகலா சார்பில் மனு கொடுத்திருப்பதாக வெளியாகியுள்ள  தகவலை, கர்நாடக சிறைத்துறை மறுத்துள்ளது.

இது குறித்து கர்நாடக சிறைத்துறை பொலிஸ் பணிப்பாளர் சத்ய நாராயணராவ் கூறுகையில்,

‘பெங்களூரு சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றக் கோரி சசிகலா சார்பில் எந்த ஒரு மனுவோ, கடிதமோ சிறைத்துறை அதிகாரிகளிடம் இதுவரை வழங்கப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு,  சசிகலாவின் வழக்கறிஞரும்  ‘மனு எதுவும் கொடுக்கப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா தன்னை தமிழக சிறைக்கு மாற்றக் கோரி கர்நாடக சிறைத்துறை அதிகாரியிடம் மனு கொடுத்திருப்பதாக நேற்று (திங்கட்கிழமை) தகவல் வெளியான நிலையில், கர்நாடக சிறைத்துறை சார்பில் மேற்படி விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg