Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலிப்பைன்ஸில் பேரூந்து விபத்து: 13 மாணவர்கள் உயிரிழப்பு

In
Published: 05:33 GMT, Feb 21, 2017 |
0 Comments
1195
icon_com
This post was written by : Sylviya

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று பிலிப்பைன்ஸில் நேற்று (திங்கட்கிழமை) விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, குறித்த பேரூந்தில் 50 மாணவர்கள் பயணித்தனர் எனவும் பேரூந்து தடுப்பில் ஏற்பட்ட கோளாறே இந்த விபத்து ஏற்படக் காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளான மூவர் சிகிச்சை பெறும் பொருட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்தனர் எனவும் வாகன சாரதியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தை நேரில் பார்வையுற்ற ஒருவர் கருத்து தெரிவித்த போது, “பேரூந்து ஒன்று மிக வேகமாக பாதையில் வருவதை நான் அவதானித்தேன். பின்னர் அது மின்கம்பம் ஒன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளானது. தடுப்பில் கோளாறு ஏற்பட்டே அந்த பேரூந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்திருக்கக்கூடும் என நான் நம்புகின்றேன்” என தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த விபத்து ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg