Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நான்கு கோடி ஏலத்தில் தெரிவாகிய ஆச்சரியத்தில் ஆஃப்கான் வீரர்

In கிாிக்கட்
Updated: 05:54 GMT, Feb 21, 2017 | Published: 05:53 GMT, Feb 21, 2017 |
0 Comments
1525
icon_com
This post was written by : Elakkiya
201702202027165459_Really-surprised-really-happy--Rashid_SECVPF

ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில் சன்றைஸஸ் ஹைதராபாத் அணியில் 4 கோடி ரூபா ஏலத்தில் தெரிவாகியமை ஆச்சரியமாகவும் மகிழ்சியாகவும் இருப்பதாக ஆஃப்கான் வீரர் ரஷித் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஐ.பி.எஸ் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், யாரும் எதிர்பாராத வகையில் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 18 வயதுடைய சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 4 கோடி ரூபாவுக்கு ஹைதராபாத் அணியில் தெரிவானார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ரஷித், ‘ஐ.பி.எல். ஏலத்தை தொலைக்காட்சியில் பார்த்த என்னுடைய பெற்றோர் தொலைபேசியூடாக எனக்கு அறிவித்தனர். நானும் ஏலத்தில் தோன்றுகின்றேன் என்றனர். நான் ஏலத்தில் எடுக்கப்பட்டது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதேவேளையில் மிகவும் சந்தோஷசமாகவும் இருந்தது. இந்த சம்பவத்தை என்னால் நம்பவே முடியவில்லை.

ஆஃப்கானிஸ்தான் வீரர்களுடைய நோக்கமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது. அதற்காக நாங்கள் கடினமாக முயற்சி செய்து விளையாடி வருகின்றோம். டெஸ்ட் போட்டியில் விளையாடும் அனுமதியை பெற்றுவிட்டோம் என்றால், எங்களுடைய சந்தோஷத்தை விவரிக்க இயலாது” என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg