Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெஞ்சமின் நெதன்யாகு சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம்

In உலகம்
Published: 06:04 GMT, Feb 21, 2017 |
0 Comments
1181
icon_com
This post was written by : Sylviya

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின்  நெதன்யாகு நேற்று (திங்கட்கிழமை) சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயத்தின் பின்னர் கருத்து தெரிவித்த அவர், சிங்கப்பூர் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் பல தொழில் முயற்சிகள் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குறித்த இரு நாடுகளுக்கு இடையில் உள்ள கூட்டு தொழில் முயற்சிகள் தொடர்பில் தான் மிகுந்த திருப்தியடைந்துள்ளதாக தெரிவித்த நெதன்யாகு, இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் எதிர்வரும் காலங்களிலும் இது போன்ற தொழில் முயற்சிகள் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நெதன்யாகு, “ஆர். அன்ட் டி நிதியத்தின் (R&D fund) உதவியுடன், சிங்கப்பூர் மற்றும் இஸ்ரேலில் சுமார் 150 தொழிற் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் தொழிநுட்பமயப்படுத்தப்பட்ட ஒரு உலகத்திலேயே வாழ்கின்றோம். புதுமையை விரும்புபவர்களுக்கே  இந்த உலகம் சொந்தம். அந்தவகையில், இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர் என்பன இணைந்து பல புதிய  கண்டுபிடிப்புக்களை உருவாக்க முடியும் என்பதோடு நாளைய உலகிற்கு தேவையான வகையில் தொழில் முயற்சிகளை உருவாக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg