Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வழக்கறிஞர் குழு தீவிரம்

In
Updated: 06:16 GMT, Feb 21, 2017 | Published: 06:14 GMT, Feb 21, 2017 |
0 Comments
1196
icon_com
This post was written by : Shailu
sasikala-1

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, சென்னை புழல் சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகளில் அவரது வழக்கறிஞர் குழு ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை மறுக்கவோ, உறுதி செய்யவோ மறுத்துவிட்ட அ.தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், ‘பெங்களூர் சிறையில் இருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலர் சசிகலா சென்னை சிறைக்கு மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’என்று மட்டும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் ஆவடி குமார் கூறுகையில், சென்னை சிறைக்கு சசிகலாவை மாற்றும் நடவடிக்கையில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சட்டப்படி நடவடிக்கை எடுத்து, சசிகலாவை சென்னையில் உள்ள சிறைக்கு மாற்றுவோம்’ என்றும் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தனி நீதிமன்றம் அளித்த 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இதையடுத்து, 15ஆம் ஆம் திகதி சசிகலா உள்ளிட்டோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg