Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளி. கண்ணகையம்மன் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு விழா

In விளையாட்டு
Updated: 08:11 GMT, Feb 21, 2017 | Published: 08:10 GMT, Feb 21, 2017 |
0 Comments
1120
This post was written by : Elakkiya

கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட ஆனையிறவு தட்டுவன்கொட்டி கண்ணகையம்மன் வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

பாடசாலை அதிபர் க.கருணாநந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

கௌரவ விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களும், சிறப்பு விருந்தினராக கண்டாவளை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பூ.ராஜ்வினோத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய ‘மாணவர்கள் தமது கல்விபராயத்தை கற்றல் நடவடிக்கையிலும், விளையாட்டு மற்றும் துணைப்பாடங்களில் விருத்தியுள்ள ஒரு சமூகமாக மாற்றமடைவதிலும் செலவிடவேண்டும்.
பெற்றோர்கள் உங்கள் ஒவ்வொருவரையும் கல்விமான்களாக மாற்ற எத்தனையோ விடயங்களை தமது வாழ்வில் தியாகம் செய்கிறார்கள். அதனை உணர்ந்தவர்களாக மாணவர்கள் நடக்கவேண்டும்.

அதேபோன்று பெற்றோர்களாகிய ஒவ்வொருவரும் வறுமையை காரணமாக கொண்டு தமது பிள்ளைகளின் கல்விக்கு மறுப்பு தெரிவிக்காது அவர்களது எதிர்காலம் ஓர் சிறந்த வாழ்வாக மாற முனைப்பாக செயற்படவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

இதன்போது, பாடசாலையின் பௌதீக வள அபிவிருத்திக்கு 2017 ஆம் ஆண்டிற்க்கான தனது நிதி ஒதுக்கீட்டில் ரூபாய் ஒரு இலட்சம் தருவதாகவும் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

s1

s11111111

s11111

s111111

s111111111

s1111

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg