Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சச்சின் எப்போதும் முதல்நிலை வீரர், கோஹ்லி சம்பியன் வீரர்: ஹர்பஜன்சிங்

In கிாிக்கட்
Updated: 08:50 GMT, Feb 21, 2017 | Published: 08:49 GMT, Feb 21, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Elakkiya
virat-kohli-sachin-tendulkar-afp_806x605_71487227967

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சம்பியன் வீரர் எனினும் முன்னாள் வீரர் சச்சின் டென்டுல்கர் எப்போதும் முதல்நிலை வீரர் என அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கிய செவ்வி ஒன்றின்போதே ஹர்பஜன்சிங் மேற்படி தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில் விராட் கோஹ்லியின் அற்புதமான திறமை கிரிக்கட் ஜாம்பவான் என்று புகழப்படும் சச்சின் டென்டுல்கருடன் அவரை ஒப்பிட்டு பேசுவதற்கு வழிவகுத்தது.

இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ கடந்த ஆண்டுகளில் துடுப்பாட்டத்தில் அசத்தும் விராட் கோஹ்லி அனைத்து துடுப்பாட்ட சாதனைகளையும் முறியடிப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனாலும் சச்சின் எப்போதும் சச்சின்தான். நான், விராட் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் சச்சினாலேயே கிரிக்கட் விளையாட ஆரம்பித்தோம். நீங்கள் விராட் கோஹ்லியிடம் கேட்டுப் பாருங்கள். அவரும் இதையே கூறுவார்’ என்று தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg