Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகை பாவனாவை பாலியல் தொந்தரவு செய்த சம்பவத்திற்கு வரலட்சுமி கண்டனம்

In சினிமா
Updated: 08:59 GMT, Feb 21, 2017 | Published: 08:59 GMT, Feb 21, 2017 |
0 Comments
1278
icon_com
This post was written by : Shailu
Varalakshmi

நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

“நான் ஒரு நடிகை. திரையில் கவர்ச்சியாக நடிப்பதால் என்னை மோசமாக நடத்த வேண்டும் என்பது அர்த்தமல்ல.

இது என்னுடைய வாழ்க்கை. பாலியல் தொந்தரவுகளை சகித்துக்கொண்டு தான் சினிமா துறையில் இருக்க வேண்டும் என்ற வாதம் சரியானதல்ல.

பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் எனக் கூறுவதை விட்டுவிட்டு பெண்களை எப்படி நடத்த வேண்டும்? அவர்களிடம் எவ்வாறு பேச வேண்டும் என ஆண்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.

திரையுலகில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் பெண்களை அவமானப்படுத்துவது நிகழ்ந்து வருகிறது. பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல குற்றங்கள் அதிகரித்துவருகின்றன.

இப்போது இதைப் பற்றிப் பேசாவிட்டால் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கனவாகவே இருக்கும். சமூகத்தில் இருந்து பாலியல் வன்முறை என்கிற வார்த்தையை நீக்க முடியாமல் போய்விடும்.

நான் அமைதியாக இருக்கப் போவதில்லை. என் எல்லா சகோதரிகள், நண்பர்களும் இதுபற்றி பேசவேண்டும் என்று விருப்பப்படுகிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg