Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

In இந்தியா
Updated: 11:09 GMT, Feb 21, 2017 | Published: 10:34 GMT, Feb 21, 2017 |
0 Comments
1105
This post was written by : Shailu

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னரே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

’16ஆயிரத்து 628 வருவாய் கிராமங்களில் 13ஆயிரத்து 305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 1,564 கிராமங்களில் அதிகபட்சமாக 87 சதவிகிதம் வரை வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, 29 லட்சம் விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 46 லட்சம் ஏக்கருக்கு 2 ஆயிரத்து 49 கோடி நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர், இதர பாசன பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5ஆயிரத்து 465, மானாவாரி பயிருக்கு ரூ.3,000, நீண்டகாலப் பயிருக்கு ரூ.7,287 வழங்கப்படும்.

அத்தோடு பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏக்கருக்கு ரூ.2ஆயிரத்து 428 முதல் ரூ.3.ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த அறிவிப்பால் பயிர் காப்பீடுத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 14.99 லட்சம் விவசாயிகள் ரூ.4ஆயிரத்து 800 முதல் ரூ.69ஆயிரம் வரை காப்பீடு பெறலாம்.

மேலும் இவை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்’ என்றும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg