Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் துறைமுக வளர்ச்சிக்கு நோர்வே உதவி

In இலங்கை
Published: 10:34 GMT, Feb 21, 2017 |
0 Comments
1051
icon_com
This post was written by : Ravivarman
IMG_4710

இலங்கை துறைமுகங்களின் அபிவிருத்தியின் பொருட்டு முதலீடுகளை மேற்கொள்வதற்கு நோர்வே அரசாங்கம் தயாரென இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்பிஜோன் கஸ்ராட்சதர் (Thorbjorn Gaustadsaether) தெரிவித்தார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் ஊடகப் பிரிவுடனான விசேட சந்திப்பில் கலந்து கொண்டபோத  அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

“நோர்வேயிடம் துறைமுகம் சார்ந்த உயர் தொழில்நுட்பங்கள் காணப்படுகின்றன. அத்துடன் அணுசக்தி, கொள்கலன்கள், போக்குவரத்து முனையங்களிலுள்ள தொழிற்பாடுகள் மற்றும் சேவை வழங்கல் போன்ற  சில துறைகளில் எம்மால் முதலீடுகளை மேற்கொள்ள இயலும்.

விசேடமாக சூழல் மாசடைதலை தடுக்கும் பொருட்டு எம்மிடம் உயர் தொழில்நுட்பங்கள் காணப்படுகின்றன. மின்சார உற்பத்தியின் பொருட்டு இயற்கை வாயு குழாய்களை முனையங்களிற்கு அருகாமையில் அமைப்பதற்கான அனுபவம் எம்மிடமுள்ளது. எனவே எம்மால் இவ்வாறான துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளமுடியுமெனவும், உலக சந்தையின் போட்டித்தன்மையினை எதிர்கொள்வதற்கான சக்தி இலங்கைக்குள்ளது. இதன் காரணமாக கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கை அபிவிருத்தியடைவதற்கான சந்தர்ப்பம் அதிகரிக்கும் ” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg