Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தையீப் எர்டோகனுக்கு துருக்கியர்கள் பலர் ஆதரவு

In ஐரோப்பா
Updated: 10:59 GMT, Feb 21, 2017 | Published: 10:35 GMT, Feb 21, 2017 |
0 Comments
1242
This post was written by : Sylviya

துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சுமார் 200 பேர் நேற்று (திங்கட்கிழமை) ஒன்றுகூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி சதிப்புரட்சியுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 47 பேரின் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதே பொதுமக்கள் நீதிமன்ற வளாகத்தில் ஒன்றுகூடியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பொதுமக்களில் சிலர் துருக்கியின் தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு நின்றதாகவும், மேலும் சிலர் சதிப்புரட்சியுடன் தொடர்புடையர்களுக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோஷமிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த துருக்கியின் மல்கா கிளை (Mugla branch) ஆளும் கட்சியின் தலைவர், “எமது நாட்டில் பல தியாகிகள் மற்றும் வீரர்கள் உள்ளனர். அதனாலேயே இந்த இராணுவ சதிப்புரட்சியுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்” என தெரிவித்தார்.

ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் தரப்பினர்கள், இராணுவ சதிப்புரட்சியுடன் தொடர்புடைய குற்றவாசிகளின் தலைகள் துண்டிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.

அது குறித்து கருத்து தெரிவித்த தையீப் எர்டோகன், துருக்கி நாடாளுமன்றம் குறித்த தீர்மானத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் ஆதரவாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg