Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘சைட்டம்’ பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி

In இலங்கை
Published: 10:52 GMT, Feb 21, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
Maithripala-Sirisena-

‘சைட்டம்’ எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பட்டத்தை அரசாங்கம் அங்கீகரிக்கக்கூடாதென தொடர்ந்தும் எதிர்ப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில், சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடி நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் அதிகாரிகள், அங்கு கல்விகற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் நேற்று (திங்கட்கிழமை) இரவு நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இவ்விடயத்தைத் தெரிவித்தார்.

இப்பிரச்சினை தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இனிவரும் நாட்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் மருத்துவ சபையுடனும் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று ஊவா மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு, இன்றைய தினம் தென் மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg