Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உச்சநீதிமன்ற அனுமதியின்றி சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற முடியாது: பி.விஆச்சார்யா

In இந்தியா
Updated: 11:39 GMT, Feb 21, 2017 | Published: 11:36 GMT, Feb 21, 2017 |
0 Comments
1082
icon_com
This post was written by : Shailu
Acharya

உச்சநீதிமன்றத்தின் அனுமதியின்றி சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற முடியாது என மூத்த வழக்கறிஞர் பி.விஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்த தெரிவித்த மூத்த வழக்கறிஞர் பி.விஆச்சார்யா கூறுகையில்,

‘சிறைச்சாலை விதிகளின் படி கைதி ஒருவரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட சிறையின் உயரதிகாரிகள் முடிவெடுக்கலாம்.

எனினும் சசிகலா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு இது பொருந்தாது. உச்சநீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் தமிழக சிறைக்கு சசிகலாவை மாற்ற முடியாது.

இதனையும் மீறி சசிகலா தமிழக சிறைக்கு மாற்றப்பட்டால் அதனை எதிர்த்து வழக்கு தொடர முடியும்.’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg