Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முறக்கொட்டஞ்சேனையில் தோண்டத் தோண்ட மனித எச்சங்கள்!

In இலங்கை
Published: 11:50 GMT, Feb 21, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Ravivarman

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையில், ராணுவ முகாமிற்கு  அருகே மனித எச்சங்கள் காணப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளின் போது மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு கண்டெடுக்கப்பட்ட துருப்பிடித்த இரும்புக் கம்பிகள், மற்றும் மண் மாதிரிகள் என்பன ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டு பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி  சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.

அத்துடன், மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் தடயங்கள் காணப்பட்ட இடத்திற்கு மேலதிக நீதவானும், மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் ஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி, சிரேஷ்ட வைத்திய நிபுணர் எம்.சிவசுப்பிரமணியம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் பி.சி. சுரங்க பெரேரா, கண்டி வைத்தியசாலை வைத்திய நிபுணர் அஸித்த கீர்த்தி, மாத்தளை பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர் டி.ஐ.வைத்தியலங்கார, புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரி ஜே.ஏ.ரி.வி.பிரியந்த ஆகியோர் அடங்கிய குழு விஜயம் செய்திருந்தது.

DSC01362

 

DSC01360
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg