Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘விவேகம்’ பற்றி சுவாரஷிய தகவலை வெளியிட்டார் ‘சிறுத்தை’ சிவா

In சினிமா
Updated: 11:55 GMT, Feb 21, 2017 | Published: 11:54 GMT, Feb 21, 2017 |
0 Comments
1345
icon_com
This post was written by : Shailu
ajith

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் படம் ‘விவேகம்’. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல்கேரியாவின் பிரபல ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ‘விவேகம்’ படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் சிவா தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். பின்னர் மாணவர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அவர்,

‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் பல்கேரியா செல்ல உள்ளோம்.

‘விவேகம்’ படத்தில் இரண்டு மாறுபட்ட வேடத்தில் அஜித் நடித்துள்ளார். ஆனால் ‘விவேகம்’ படத்தில் அஜித்தின் ஒரு வேடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், மற்றொரு வேடத்தின் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும்.

மேலும் சரியான இடைவெளியில் ‘விவேகம்’ படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் கட்டுக்கோப்பான உடல் விஎப்எக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது. அந்த உடற்கட்டுக்காக அஜித் கடுமையாக உழைத்ததார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg