Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாவனாவிற்கு பாலியல் தொந்தரவு: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்

In சினிமா
Updated: 12:06 GMT, Feb 21, 2017 | Published: 12:06 GMT, Feb 21, 2017 |
0 Comments
1311
icon_com
This post was written by : Shailu
bhavana

நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு திரைத்துறையை சேர்ந்த பலரும்பல்வேறு கண்டங்களை தெரிவித்து வருகின்ற நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘தமிழ், மலையாள பட உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் பாவனா. அவரை சில சமூக விரோதிகள் பாலியல் பலாத்காரம் செய்த செயலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கேரள அரசும், காவல்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

திரைப்படத் துறையில் நடைபெறும் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் எப்போதும் ஒத்துழைப்பு அளிக்கும்.’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg