Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாவனா கடத்தப்பட்ட சம்பவத்தில் என்னை தொடர்புப்படுத்த வேண்டாம்: நடிகர் திலீப் கண்டனம்

In சினிமா
Updated: 12:31 GMT, Feb 21, 2017 | Published: 12:30 GMT, Feb 21, 2017 |
0 Comments
1336
This post was written by : Shailu
Dilip

நடிகை பாவனா கடத்தப்பட்ட சம்பவத்தில் நடிகர் திலீப் கண்டனம் தொடர்புப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு அவர் மறுப்பு தெரிவித்தள்ளார்.

பிரபல நடிகை பாவனா கடந்த 17ஆம் திகதி இரவு காரில் ஒரு கும்பலால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார்.

நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மலையாள திரையுலகின் முன்னணி பிரமுகர்கள், தயாரிப்பாளர் மற்றும் பிரபல நடிகர் ஒருவருடன் பேசி இருப்பது தெரிய வந்ததுள்ளது.

இதனையடுத்து, ஏற்கனவே நடிகர் திலீப் மற்றும் பாவனாவிற்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்ததையடுத்து, இதன் காரணமாக பாவனா கடத்தப்பட்டு இருக்கலாம் என சமூக ஊடங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டன.

இதற்கு நடிகர் திலீப் மறுப்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,

‘கேரளாவில் இப்படி யொரு சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. யாருக்கும் இப்படியொரு நிலை ஏற்படக்கூடாது.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அது சரியான கோணத்தில் செல்கிறது.
பொலிஸாரின் விசாரணையை திசை திருப்பும் முயற்சிகளில் ஊடகங்கள் ஈடுபடக்கூடாது.

பொலிஸாரும் சமூக ஊடகங்கள் தவறான கருத்துக்களை பதிவு செய்யக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg