Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகளை சந்தித்தார் கிழக்கு முதலமைச்சர்

In இலங்கை
Updated: 12:55 GMT, Feb 21, 2017 | Published: 12:55 GMT, Feb 21, 2017 |
0 Comments
1444
This post was written by : Surenth

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில் நேர்முகப் பரீட்சையின் போது தெரிவு செய்யப்பட்டாத பட்டதாரிகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) முதலமைச்சர் நஷீர் அஹமட்டின் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் போது பாதிக்கப்பட்ட 83 பட்டதாரி மாணவர்கள் முதலமைச்சரை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, தாம் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில் நேர்முகத் தேர்வொன்றை நடத்தி அதில் தம்மை நீக்கியது முறையற்றது என பட்டதாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்களுக்கான தீர்வினை பெற்றும் தருவதற்கு முழுமையான முயற்சிகளை முன்னெடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்தார்.

மேலும், மாகாண சபையில் விசேட அமைச்சரவைக் கூட்டமொன்றை கூட்டி பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்திருந்தார்.

Eastern Province CM 01 Eastern Province CM 02 Eastern Province CM 03 Eastern Province CM 05

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg