Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அட்டாளைச்சேனையில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

In
Published: 13:26 GMT, Feb 21, 2017 |
0 Comments
1288
icon_com
This post was written by : Surenth

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 45 வயதிற்கு உட்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பை வழங்க கோரி கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) அட்டாளைச்சேனை கூட்டுறவு சங்க கட்டிடத்தில் முன்பாக இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போரட்டத்தில் கிழக்கு மாகாண பட்டதாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த காலத்தில் நேர்முக பரீட்சைகள் மூலம் மாத்திரமே அரச சேவையில் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டதை போராட்டக் காரர்கள் நினைவு படுத்தியிருந்தனர்.

இதேபோல தங்களையும் போட்டி பரீட்சைகள் இன்றி நேர்முகப் பரீட்சை மூலம் இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

அத்துடன், நேர்முக தேர்வு நடாத்தும் போது பட்டம் பெற்ற ஆண்டு மற்றும் வயது என்பவற்றை கவனத்தில் கொண்டு வேலை வாய்ப்பு வழக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Attalaichchenai Protest 01 Attalaichchenai Protest 02 Attalaichchenai Protest 04 Attalaichchenai Protest 05

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg