Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு மாகாண சபையில் பிரேரணைகள் சில முன்மொழியப்பட்டுள்ளன

In இலங்கை
Updated: 14:43 GMT, Feb 21, 2017 | Published: 14:43 GMT, Feb 21, 2017 |
0 Comments
1547
This post was written by : Surenth

வடக்கு மாகாண சபையின் இன்றைய 85ஆவது அமர்வின் போது மாகாண சபை உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் அவைத்தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதியினால் முன்மொழியப்பட்ட தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவு சங்க பிரேரணையை பிரதி அவைத்தலைவர் கமலேந்திரன் வழி மொழிய குறித்த பிரேரணை அவைத்தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதேபோல உறுப்பினர் லிங்கநாதனால் கொண்டுவரப்பட்ட பாடசாலை ஆசிரியர் சம்மந்தமான பிரேரணை பிரதி அவைத்தலைவர் கமலேந்திரன் வழி மொழிந்தார்.

அத்துடன் கூட்டுறவு திணைக்கள வெற்றிடம் சம்மந்தமான பிரேரணை பரஞ்சோதியால் முன்மொழியப்பட்டு புவனேஸ்வரனால் வழி மொழியப்பட்டு அவைத்தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நீர் பிரச்சினை தொடர்பான விஷேட அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg