Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் 96 பேர் டெங்குநோயால் பாதிப்பு

In இலங்கை
Updated: 16:53 GMT, Feb 21, 2017 | Published: 16:53 GMT, Feb 21, 2017 |
0 Comments
1119
This post was written by : Ravivarman

வவுனியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்குள் 96 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதாரப் பொதுப்பரிசோதகர் கணபதிப்பிள்ளை மேஜெயா தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகள் காரணமாக டெங்கு பரவக்கூடிய சூழலை வைத்திருந்தவர்களுக்கு கடந்த  வாரம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அரச திணைக்களங்கள், விடுதிகள், தனியார் விடுதிகள் பொதுமக்கள் அனைவரும் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு கோரப்பட்டுள்ளதுடன் அசுத்தம் பேணும் சந்தர்ப்பத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg