Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு கிழக்கில் இடம்பெறும் நில அபகரிப்பு உடன் நிறுத்தப்பட வேண்டும்: அரசியல் பிரதிநிதிகள் (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Published: 03:13 GMT, Feb 22, 2017 |
0 Comments
1358
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

வடக்கு கிழக்கில் திட்டமிடப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்பு உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ரவிகரன் ஆகியோர் கூட்டாக இக் கோரிக்கையை முன்வைத்தனர்.

படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இன்று இப் போராட்டம் நடத்தப்பட்டது.

இப் போராட்டம் காரணமாக மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள பிரதான வீதியின் போக்குவரத்து, சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

mullaithivu (3) mullaithivu (1)

காணி விடுவிப்புக்கு தீர்வில்லை: மாவட்ட செயலகத்தை முற்றுகையிட தீர்மானம்:-

படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு இரவு பகலாக மக்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்று (புதன்கிழமை) மறியல் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமூக அமைப்புகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களால் இன்று காலை 9.30 மணிக்கு இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

காணி விடுவிப்பு கோரி படை முகாம்களுக்கு முன்னால் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் ஆகிய பிரதேசங்களில் மக்கள் தொடர் சத்தியாக்கிரகம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இம்மக்களுடன் பல்கலைக்கழக சமூகத்தினர், பாடசாலை மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பிற சமூகத்தினரும் கைகோர்த்துள்ளனர்.

குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, பரவிப்பாஞ்சான் மக்களை நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg