Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேற்கு லிபிய கரையில் 74 குடியேற்றவாசிகளின் சடலங்கள் கரையொதுங்கின

In உலகம்
Updated: 11:58 GMT, Feb 22, 2017 | Published: 04:19 GMT, Feb 22, 2017 |
0 Comments
1268
This post was written by : Elakkiya

லிபியாவிலிருந்து மத்தியதரைக் கடலூடாக சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முற்பட்ட 74 அகதிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் பயணித்த ரப்பர் படகு நேற்று (செவ்வாய்க்கிழமை) மேற்கு லிபிய கரையில் ஒதுங்கியுள்ளதுடன் படகுடன் 74 பேரின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபிரிக்க நாடான லிபியாவின் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக அந்நாட்டு மக்கள் அயல் நாடுகளுக்கு குடிபெயர்ந்து செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மத்தியதரைக் கடலூடாக சட்டவிரோதமான முறையில் ஐரோப்பா நோக்கி தொடர்ச்சியாக படையெடுக்கின்றனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக கடலில் பயணிக்கும் போது அவ்வப்போது கடலில் மூழ்கி அவர்கள் பலியாகும் சம்பவங்களும் அடிக்கடி இடம்பெறுகின்றது. சிலர் உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்படுகின்றனர்.

லிபியா மக்கள் அகதிகளாக செல்வதை தடுக்க அந்நாட்டு கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் எந்த பலனும் இல்லை என்றே கூறமுடியும்.

கடந்த ஆண்டில் மாத்திரம் லிபியா மற்றும் இத்தாலிக்கு இடையில் ஒரு லட்சத்து 81 ஆயிரம் குடியேற்றவாசிகள் குடியேறியுள்ளனர். 4500 ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg