Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளைக் கண்டித்து தி.மு.க-வினர் உண்ணாவிரதப் போராட்டம்

In இந்தியா
Updated: 04:08 GMT, Feb 22, 2017 | Published: 04:07 GMT, Feb 22, 2017 |
0 Comments
1138
icon_com
This post was written by : Shailu
stalin

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளைக் கண்டித்து தி.மு.க-வினர் இன்று (புதன்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை பகுதியில் ஆரம்பமாகிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.

அவருடன் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோரும்  கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க-வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடரில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg