Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களுத்துறை படகு விபத்தில் மேலும் ஒருவரின் சடலம் மீட்பு

In இலங்கை
Updated: 04:15 GMT, Feb 22, 2017 | Published: 04:15 GMT, Feb 22, 2017 |
0 Comments
1171
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
katukuruntha accident

களுத்துறை – கட்டுகுறுந்த படகு விபத்தில் காணாமல் போன நால்வரில் ஒருவரது சடலம் இன்று (புதன்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளது.

28 வயதான ஒருவரது சடலமே இன்று மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போன மேலும் மூவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பேருவளை கடற்பிரதேசத்திலுள்ள தேவாலயம் ஒன்றிற்கு சென்று திரும்பியபோது கடந்த திங்கட்கிழமை கட்டுக்குறுந்த பகுதியில் குறித்த படகு விபத்திற்குள்ளாகியது. இதன்போது 11 பேர் உயிரிழந்ததோடு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

எண்ணிக்கைக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்சென்றமையே இவ் விபத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டதையடுத்து, படகின் உரிமம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாவும் நட்டஈடாக வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg