Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாக். சூப்பர் லீக்கின் இறுதி போட்டி லாகூரில்: கிரிக்கெட் சபையின் முதல் வெற்றி

In கிாிக்கட்
Updated: 05:16 GMT, Feb 22, 2017 | Published: 05:16 GMT, Feb 22, 2017 |
0 Comments
1536
This post was written by : Anojkiyan

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் ரி-ருவென்ரி தொடரின் இறுதி போட்டியை, பாகிஸ்தானின் லாகூர்  மைதானத்தில் நடத்த ஐந்து அணி உரிமையாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இவ் இறுதி போட்டி மார்ச் மாதம் 5ஆம் திகதி, லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 8 வருடங்களாக பாகிஸ்தானில் சென்று விளையாட சர்வதேச கிரிக்கெட் அணிகள் தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் ரி-ருவென்ரி தொடரின் இறுதி போட்டி, பாகிஸ்தானில் இடம்பெறுவது பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகின்றது.

இதுகுறித்து பாகிஸ்தான் சூப்பர் லீக் தலைவர் நஜம் சேதி கூறுகையில் ”பாகிஸ்தான் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஐந்து அணிகள் உரிமையாளர்களின் அர்ப்பணிப்பு எங்களது மனதை உருகச் செய்துள்ளது. லாகூரில் போட்டியை நடத்த நாங்கள் அனைவரும் உறுதியோடு உள்ளோம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg