Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிம் ஜொங்- நம்மின் கொலையுடன் வடகொரிய தூதரக அதிகாரிக்கும் தொடர்பு!

In உலகம்
Updated: 04:45 GMT, Feb 22, 2017 | Published: 04:44 GMT, Feb 22, 2017 |
0 Comments
1295
This post was written by : Elakkiya

வடகொரிய தலைவர் கிம் ஜொங்- உன்னின் சகோதரர் கிம் ஜொங்- நம்மின் கொலையுடன் மலேசியா கோலாலம்பூரில் அமைந்துள்ள வடகொரிய தூதரக மூத்த அதிகாரி ஒருவருக்கு தொடர்பிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோலாலம்பூரில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மலேசிய பொலிஸ் தலைமை அதிகாரி ஒருவர், ‘ முன்னர் அறிவித்தது போன்று இரண்டு வட கொரிய சந்தேக நபர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் கோலாலம்பூரில் அமைந்துள்ள வடகொரிய தூதரகத்தின் துணை செயலாளர். மற்றையவர் வடகொரிய அரச விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர்.

இவர்கள் தவிர மேலும் பலர் தொடர்புபட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. நான்கு வடகொரிய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகின்றது. மேலும் ஒருவர் மலேசியா பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்தோனேஷியா மற்றும் வியட்நாமைச் சேர்ந்த பெண்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg