Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உசேன் போல்ட்டை போல் ஒருநாள் வேகமாக ஓடவேண்டும்: கோஹ்லியின் ஆசை

In விளையாட்டு
Updated: 06:55 GMT, Feb 22, 2017 | Published: 06:00 GMT, Feb 22, 2017 |
0 Comments
1231
icon_com
This post was written by : Anojkiyan
virat-kohli7596

உலகின் அதிவேக மனிதராக வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் உசேன் போல்ட்டை போன்று ஒருநாள் வேகமாக ஓட விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி விருப்பம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விளையாட்டு நிறுவனமான ‘பூமா’ இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியை 8 ஆண்டுகளுக்கு இந்திய மதிப்பில் 110 கோடி ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய விளையாட்டு வீரர் ஒருவர் ஒரே விளம்பரத்தில் இவ்வளவு அதிகமான தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில், ஏற்னவே பூமா நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருக்கும் உலகின் நம்பர் 1 தடகள வீரர் உசேன் போல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில்,

‘விராட் கோஹ்லி இதற்கு சரியான தேர்வு’ என புகழ்ந்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள விராட் ‘ஒருநாள் உங்களை போன்று வேகமாக ஓட விரும்புகின்றேன். நன்றி ஜாம்பவான்’ என குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg