Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் வேகமாக பரவுகிறது பன்றிக் காய்ச்சல்: உயிரிழப்பு 14-ஆக அதிகரிப்பு

In இந்தியா
Updated: 06:19 GMT, Feb 22, 2017 | Published: 05:53 GMT, Feb 22, 2017 |
0 Comments
1192
icon_com
This post was written by : Shailu
swine-flu1

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேகமாக பன்றிக்காய்ச்சல் பரவி வருகின்றது. இதனால் 2 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் பல்வேறு மருத்துவமனைகளில் 1020 பேருக்கு மேல் பன்றிக் காய்ச்சல் பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் கடந்த 2 நாட்களில் மட்டும் கோவையில் மூவரும், மதுரையில் ஒருவரும், திருச்சியில் ஒரு குழந்தை என மொத்தம் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், தற்போதைய நிலவரப்படி கோவை அரசு மருத்துவமனையில் 37 பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு சிறப்பு பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற நிலையில், பன்றிக்காய்ச்சல் குறித்து மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg