Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிரான தி.மு.க மனு விசாரணை ஒத்தி வைப்பு

In இந்தியா
Updated: 07:44 GMT, Feb 22, 2017 | Published: 07:43 GMT, Feb 22, 2017 |
0 Comments
1141
This post was written by : Shailu

நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க கோரி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ரமேஷ் தலைமையிலான அமர்வின் முன்பு குறித்த மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 27ஆம் ஒத்திவைத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த திங்கட்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார்.

ஸ்டாலினின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவதாகக் கூறிய பொறுப்பு தலைமை நீதிபதி ரமேஷ் தலைமையிலான அமர்வு, நேற்றைய வழக்கு விசாரணைப் பட்டியலில் குறித்த மனு இல்லை எனக் கூறி, வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg