Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடுமையான பனிப்பொழிவு காரணமாக சீனாவின் வட பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

In
Updated: 07:53 GMT, Feb 22, 2017 | Published: 07:52 GMT, Feb 22, 2017 |
0 Comments
1174
icon_com
This post was written by : Elakkiya
sav

வடக்கு சீனாவில் வீசிய கடுமையான பனிப்பொழிவு காரணமாக சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பகுதிகள் மற்றும் ஷாங்ஸி மாகாணத்தின் பல பகுதிகளிலும் நேற்று (செவ்வாய்க்கிழமை) போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மங்கோலியா தன்னாட்சி பகுதியிலுள்ள ஹோங்சோட் உள்ளிட்ட பல நகரங்களிலும் மற்றும் ஷாங்ஸி மாகாணத்தின் தையுன், டரோங், ஸின்ஷியோவ், ஜின்செங் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மேற்படி கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.

இதன்காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகள் யாவும் மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அத்துடன் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் எச்சரிக்கை குறியீடுகளும் வீதிகளில் போடப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி வீதிகளில் படிந்துள்ள பனிப்படிவுகளை அகற்றும் நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg