Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்: போல்ட் கருத்து

In கிாிக்கட்
Published: 08:27 GMT, Feb 22, 2017 |
0 Comments
1102
icon_com
This post was written by : Anojkiyan
Trent-Boult-of-New-Zealand-appeals5

இந்தியாவில் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள ஐ.பி.எல் தொடரில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ள நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட், இத்தொடரின் மூலம் திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில், ட்ரென்ட் போல்டை நியூசிலாந்து டொலர் படி, 1.04 மில்லியன் டொலர்களுக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.

இதன்மூலம், இந்த சீசனில் அதிகபட்ச விலை போன நான்காவது வீரர் என்ற பெருமையையும், அதிகபட்ச விலை போன இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இந்நிலையில், அதிக விலைக்கு ஏலம் போனது குறித்த போல்ட் கூறுகையில்,

”நான் பணத்திற்காக இந்த தொடரில் விளையாட செல்லவில்லை. ஆயிரக்கணக்கான ரசிகர்களிடையே விளையாடும்போது கிடைக்கும் அனுபவத்திற்காக செல்ல இருக்கிறேன். ஏராளமான சர்வதேச வீரர்களுடன் இணைந்து விளையாடவும், அதன்மூலம் தனது திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஐ.பி.எல். தொடரில் ஒரு அணியில் நான்கு வீரர்கள்தான் விளையாட முடியும். ஆகவே சில வீரர்கள் வெளியில் இருக்க வேண்டியிருக்கும். கொல்கத்தா அணிக்காக எனது முழுத்திறமையையும் வெளிப்படுத்த காத்துக் கொண்டிருக்கிறேன்” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg