Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமலாபால் – விஜய் விவாகரத்து

In சினிமா
Updated: 10:08 GMT, Feb 22, 2017 | Published: 10:08 GMT, Feb 22, 2017 |
0 Comments
1244
icon_com
This post was written by : Shailu
Amala Paul - Vijay

நடிகை அமலாபால் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் விஜயும் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்குப் பின்னரும் அமலாபால் தொடர்ந்து நடித்ததால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அதற்கு விஜய்யின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததுதான் காரணம் என்று கூறப்பட்டது.

இதையடுத்து விஜய்யும், அமலாபாலும் சுமூகமாகப் பிரிவது என்று முடிவு செய்தனர். அதன்படி, இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கூடுதல் குடும்பநல நீதிமன்ற நீதிபதி பூங்குழலி முன்பு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுக்கொள்ளப்பட்டது.

இதன்போது விஜய் – அமலாபால் இருவரும் நேரில் ஆஜராகி, ஒருமனதாக பிரிவதாக கூறி பிரமாண பத்திரங்களை தனித்தனியாக தாக்கல் செய்தனர்.

பிரிவு முடிவில் இருவரும் உறுதியாக இருந்ததால் முதன்மை குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து அமலாபால்- விஜய் இருவரும் சட்டப்படி நேற்று (செவ்வாய்கிழமை) பிரிந்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg