Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருத்தியமைக்கப்பட்ட பயணத் தடை உத்தரவை வெளியிட்டார் ட்ரம்ப்

In
Updated: 10:54 GMT, Feb 22, 2017 | Published: 10:44 GMT, Feb 22, 2017 |
0 Comments
1299
icon_com
This post was written by : Elakkiya
extra_022217083116

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திருத்தியமைக்கப்பட்ட  பயணத் தடை உத்தரவினை நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளார்.

இந்த உத்தரவின் பிரகாரம் அமெரிக்காவில் குடியிருக்கும் வெளிநாட்டினர் சிறிய குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது எல்லைதாண்டி வந்தாலோ கைது செய்யப்பட்டு வெளியேற்றப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

ட்ரம்பின் இந்த புதிய தடை உத்தரவினால் அமெரிக்காவிலுள்ள லட்சக்கணக்கான வெளிநாட்டினர் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தடை உத்தரவு அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது நடத்தப்படவுள்ள மறைமுக தாக்குதலாகவும் கருதப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்று ஒருசில நாட்களில் குறிப்பிட்ட ஏழு முஸ்லிம் நாடுகளிலிருந்து அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் அமெரிக்காவினுள் நுழைவதற்கு தடை விதித்தார்.

இருப்பினும் ட்ரம்பின் இந்த தடை உத்தரவுக்கு உலக நாடுகளில் மாத்திரமன்றி அமெரிக்காவிலும் பல்வேறு எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில் ட்ரம்பின் இந்த உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை பிறப்பித்தது.

இந்நிலையில், திருத்தம் செய்யப்பட்ட புதிய தடை உத்தரவை ட்ரம்ப் நேற்று பிறப்பித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg