Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடா பயணிக்கும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

In கனடா
Updated: 10:54 GMT, Feb 22, 2017 | Published: 10:54 GMT, Feb 22, 2017 |
0 Comments
1152
icon_com
This post was written by : Sylviya
16

ஹொன்டுராஸ், எல் செல்வடோர், மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளில் இருந்து வரும் குடியேற்றவாசிகள் மெக்ஸிக்க எல்லையைத் தாண்டி அமெரிக்காவுக்குள் நுழையும் எதிர்பார்ப்புடன் குடிபெயர்ந்து வந்த நிலையில், தற்போது அவர்கள் கனடாவை நோக்கி செல்வதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அதிகரித்த குடியேற்றவாசிகளின் வருகை மற்றும் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட தடை ஆகிய காரணங்களின் காரணமாகவே குடியேற்றவாசிகள் தற்போது கனடாவுக்கு செல்வதில் அதிக அக்கறை செலுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் இருந்து வரும் குடியேற்றவாசிகளும் தற்போது கனடாவில் இருப்பிடம் பெறும் பொருட்டு காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகள் தொடர்பில் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்த போது, அனைத்து குடியேற்றவாசிகளுக்கும் கனடாவில் இருப்பிடம் வழங்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அறிவித்திருந்தார்.

குறித்த அறிவித்தலை தொடர்ந்து தற்போது கனடா நோக்கி பயணிக்கும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg