Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிஜ உலக ‘ஜூராசிக் பார்க்’ சீனாவில் கண்டுபிடிப்பு

In
Published: 11:40 GMT, Feb 22, 2017 |
0 Comments
1172
icon_com
This post was written by : Elakkiya
dinosaur_647_022117030537

சீனாவின் செஜியாங் மாகாணத்தில் 65 முதல் 145 மில்லியன்ஆண்டுகளுக்கு முன்னர் நிஜ உலக ஜூராசிக் பார்க் இருந்திருக்க கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செஜியாங் மாகாணத்தில் வரலாற்றுக்கு முந்தைய எட்டு புதிய விலங்குகள் உட்பட 65 முதல் 145 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமங்கள் ஆய்வாளார்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில், 82 டைனோசர் படிம தளங்களும் குறைந்தது ஆறு டைனோசர் இனங்களும் 25 வகையான படிம டைனோசர் முட்டைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

செஜியாங் நீர் புவிச்சரிதவியல், மற்றும் புவியியல் நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர் குழு கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் மேற்கொண்ட ஆய்வுகளின் போது மேற்படி தகவல்கள் உறுதி செய்யப்பட்டன.

செஜியாங் பகுதியை சேர்ந்த 11,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் போது, எட்டு புதிய வகை இனங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டது.

இவற்றினை கொண்டு செஜியாங் மாகாணத்தில் அதிகளவிலான டைனோசர்கள் வாழ்ந்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக செஜியாங் அருங்காட்சியகத்தின் துணை பொறுப்பாளர் ஜின் சிங்ஷெங் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg