Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொந்த இடத்திற்கு செல்லவிடாமல் தடுப்பதா தமிழர்களுக்கான பாதுகாப்பு? – சிறிதரன் கேள்வி

In இலங்கை
Published: 11:38 GMT, Feb 22, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றது எனவும் அண்மையில் அவுஸ்ரேலியா சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டில் தெரிவித்திருந்த நிலையில், இன்று வடக்கிலே தமது சொந்த நிலங்களுக்குள் காலடி எடுத்து வைக்க முடியாமல் வீதியில் போராட்டம் நடத்தி வருவது தானா தமிழர்களுக்கான பாதுகாப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சிறிதரன் இக்கேள்வியை எழுப்பினார்.

இந்நாட்டில் இரவும் பகலும் தமிழர்கள் கைதுசெய்யப்படுகின்றனர் என சுட்டிக்காட்டிய சிறிதரன், தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் நிலையில் இந்நாட்டின் தலைவர்கள் இவ்வாறான பொய்களை கூறுவது வேதனையானதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமென்றும் குறிப்பிட்டார்.

தமது காணிகளுக்குள் செல்லமுடியாமல் கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு மற்றும் பரவிப்பாஞ்சான் மக்கள் நடத்தும் போராட்டத்தை சுட்டிக்காட்டிய சிறிதரன், இந்த நாட்டின் சமவுரிமை இதுதானா என ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் இம்மக்களின் நிலையை சிங்கள தலைவர்கள் ஏன் புரிந்துகொள்கின்றார்கள் இல்லை என்றும் கேள்வியெழுப்பினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg