Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆஸிக்கு ஆறுதல் வெற்றி: தொடரை கைப்பற்றியது இலங்கை

In கிாிக்கட்
Published: 12:18 GMT, Feb 22, 2017 |
0 Comments
1293
icon_com
This post was written by : Anojkiyan
CRICKET-T20-AUS-SRI

இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-ருவென்ரி போட்டியில், அவுஸ்ரேலிய 41 ஓட்டங்களால் ஆறுதல் வெற்றிபெற்றுள்ளது.

அடிலெய்டில் இன்று (புதனக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய, அவுஸ்ரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணியின் அதிகபட்ச ஓட்டமாக, கிளின்சர் 62 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பந்து வீச்சில் மாலிங்க, சானக தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதைதொடர்ந்து, சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி 18 ஓவர்களில், 146 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இலங்கை அணி, 41 ஒட்டங்களால் தோல்வியை தழுவியது.

இதன்போது, இலங்கை அணி சார்பில், அதிகபட்சமாக முனவீர 37 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் போல்க்னர், செம்பா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக செம்பா தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் ஆட்டநாயகனான அசேல குணரட்ன தெரிவுசெய்யப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதல் இரு போட்டிகளையும் வெற்றிக்கொண்டு இலங்கை 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg