Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Published: 12:26 GMT, Feb 22, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Vithushagan

படையினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி கடந்த 23 நாட்களாக விமானப்படைத்தளத்தின் முன்பாக இரவு பகலாக போராடி வரும்   முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தலைநகர் கொழும்பில் இன்று (புதன்கிழமை ) ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட அவர்களது பூர்வீக காணிகளை அவர்களிடம் மீளக் கையளிக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியதோடு பல்வேறு சுலோகங்கள் எழுதிய பதாதைகளளையும் தாங்கியிருந்தனர்

இவ் ஆர்ப்பாட்டத்தில்  மத்திய மகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி, கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நல்லையா குமரகுருபரன் உள்ளிட்ட பல பிரதிநிதிகள் கலந்துகொண்டு கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

unnamed (4) unnamed (5) unnamed (6)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg